மகாராஷ்டிராவில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி மராத்தா இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் ஒரு ஆண்டுக்கும் மேல் நீடித்து வரும் நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோர் தங்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த விதமாற்றமும் செய்யக்கூடாது என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஒரு வித பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண உதவும்படி முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரை சந்தித்து மாநில அமைச்சர் சகன் புஜ்பால் கோரிக்கை விடுத்தார்.
அக்கோரிக்கையை தொடர்ந்து சரத் பவாரும் இப்பிரச்னை குறித்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து பேசினார். அடுத்த மூன்று மாதத்தில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் மாநில அரசு தீவிரமாக இருக்கிறது. ஆனால் பிரச்னைக்கான தீர்வு தென்படவில்லை. மராத்தா இட ஒதுக்கீடு கோரி ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் நடத்திய மனோஜ் ஜராங்கே மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த சரத் பவார்,''மத்திய மாநில அரசுகள் மணிப்பூரில் நடக்கும் இனப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுக்காமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை பக்கத்து மாநிலத்திற்கு பரவியது. கர்நாடகாவிலும் கூட நடந்தது. சமீப கால நிகழ்வுகள் மணிப்பூரில் நடப்பது போன்ற சம்பவங்கள் மகாராஷ்டிராவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் மகாராஷ்டிராவில் வரலாற்று சிறப்பு மிக்க உறுதிப்பாடு அவசியம். இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மராத்தா இன மக்கள் இடையே நாளுக்கு நாள் பிரிவினை அதிகரித்துக்கொண்டே இருப்பது கவலையளிக்கிறது. இரு தரப்பினரிடமும் அரசு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தவேண்டும். முதல்வர் ஒரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அரசு மற்றொரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மணிப்பூரை சேர்ந்த பல்வேறு சமுதாய தலைவர்கள் எங்களை வந்து சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட விவகாரம் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் இப்போது ஒருவரை ஒருவர் விரும்பாவில் மோதிக்கொண்டுள்ளனர். மத்திய அரசு இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அனைத்தும் நடந்த பிறகும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவாரா என்பது சந்தேகம்தான்'' என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/BxXLhdq
0 Comments