``பப்ளிசிட்டிக்கு அலைகிற இயக்கமாக அதிமுக மாறிவிட்டது..!” - ராஜீவ் காந்தி கடும் தாக்கு

``கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளெல்லாம் ஜோராக நடந்த கள்ளச்சாராயம் விற்பனையை வேடிக்கை பார்த்தார்களா.. உடந்தையாக இருந்தார்களா என சந்தேகம் வலுக்கிறதே!” 

``எடப்பாடி பழனிசாமியின் வன்மமான குற்றசாட்டாக இதனை பார்க்கிறேன். உதாரணமாக மரக்காணம் சம்பவத்தில் அ.தி.மு.க-வின் ஆறுமுகம் என்பவர் கைதானார். எடப்பாடி சொல்லித்தான் ஆறுமுகம் சாராயம் காய்ச்சினார் என சொல்லமுடியுமா?. எங்கோ ஒரு சமூக விரோதிகள் செய்யும் குற்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை கைக்காட்டுவதை ஏற்க முடியாது. அதிலும் கள்ளச்சாராய விற்பதை தெரிந்துகொண்டே எம்.எல்.ஏ-க்கள் எப்படி அமைதியாக இருந்திருப்பார்கள்? இவ்விவகாரத்தை வைத்து வீண் அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது”

ராஜீவ் காந்தி

``தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்குத்தான் தெரிந்திருக்கவில்லை எனச் சொல்கிறீர்கள். கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் சபாநாயகர் வரை கோடிட்டு காட்டியிருக்கிறாரே!”

``கள்ளச்சாராயம் விற்பது குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு மனு கொடுத்ததாக சொல்வதே பொய். இருவருக்குமான தனிப்பட்ட மோதல் புகாரை கவன ஈர்ப்பு தீர்மானமாக கொடுத்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கேட்டதால் சபாநாயகர் நிராகரித்தார். அதில் கள்ளச்சாராயம் என்ற வார்த்தை இருந்ததனால் அதை பிடித்து தொங்குகிறார்கள்.

ராஜீவ் காந்தி

இருப்பினும் அவரின் புகாரையடுத்து கைது நடவடிக்கை ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன. சரி நான் கேட்கிறேன். கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில்தான் கருணாபுரமும் அவரது எம்.எல்.ஏ அலுவலகமும் இருக்கிறது. அதே ஊரில் இருந்துகொண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ வேடிக்கை பார்த்தாரா? இப்போது முந்தியடித்துக் கொண்டு ஊடகத்தை சந்திக்கும் செந்தில்குமாரும் எடப்பாடியும் முன்பே ஏன் பேசவில்லை. மக்கள் சாவட்டும் என வேடிக்கை பார்த்தார்களா.? இன்னும் சொல்லப்போனால், எழவு வீட்டில் எடப்பாடி அரசியல் செய்கிறார்.”

``கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் மீதே பல்வேறு குற்றசாட்டுகள் இருக்கும்போது.. அரசே விசாரிப்பது எப்படி சரியாக இருக்கும்.. சி.பி.ஐ விசாரிப்பதில் என்ன தயக்கம் உங்களுக்கு?”

``சம்பவம் நிகழ்ந்த சில நாள்களில் சி.பி.சி.ஐ.டி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நெருங்கியிருக்கிறது. பலர் கைதாகியிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் சி.பி.ஐ முறையே விசாரித்து தீர்வு வழங்கிய உதாரணங்கள் எதாவது இருக்கிறதா..? அதேசமயம் சி.பி.சி.ஐ.டி மீது நம்பிக்கை இழப்பதும், வேறு ஏஜென்ஸி வழக்கை விசாரிக்கச் சொல்வது எதிர்க்கட்சிகளின் உரிமை. ஆனால் அதற்கான அவசியமில்லை. மிக விரைவாகவே இவ்வழக்கை தீர்வை எட்டும்.” 

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

``நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுபோல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்டாகியுள்ளனரே!”

``இந்த இரண்டு சம்பவத்தையும் ஒப்பிடுவதே ஜனநாயக படுகொலை. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு நிகழ்ந்தபோது பிரதமர் மோடி அவைக்கு வரவேண்டும், அதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால் இறுதிவரை அது நடக்காததனால் முற்றுகையிட்டோம். ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து முடித்த பிறகு அதே கோரிக்கை வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையே 3-4 நாட்களாக தொடரும்போது சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். எதிர்க்கட்சியின் நடவடிக்கையை பார்த்தால், பப்ளிசிட்டிக்கு அலைகிற இயக்கமாக அ.தி.மு.க மாறிவிட்டதாக தோன்றுகிறது.” 

நாடாளுமன்றம்

``கள்ளக்குறிச்சி சம்பவத்தால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க பெரும் பின்னடைவை சந்திக்கும் எனச் சொல்கிறார்கள்?”

``மக்கள் எங்கள்முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம், மறுக்கவில்லை. ஆனால் தி.மு.க எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெப்பாசிட் இழப்பது உறுதி.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/35ARX9v

Post a Comment

0 Comments