`சபரிமலை சீசன் வருகிறது; நாங்களும் தொந்தரவு செய்வோம்!’ - தமிழ்நாட்டை எச்சரித்த கேரள அமைச்சர்

தமிழ்நாட்டில் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதுமட்டும் அல்லாது விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்குவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் ஒரே வரி என மத்திய அரசு கூறிவரும் நிலையில் தமிழ்நாட்டில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கேரளா குற்றம்சாட்டி உள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்

தமிழ்நாட்டுக்கு வரும் பிற மாநில பதிவு பஸ்களுக்கு நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் சீட்டுக்கு 4000 ரூபாய் வீதம் காலாண்டுக்கு வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கேரளா அரசு பேருந்துகளுக்கும் ஒரு சீட்டுக்கு 4000 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் அம்மாநில போக்குவரத்துத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து கேரளா மாநில சட்டசபையில் விவாதம் எழுந்தது.

அப்போது கேரளா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் பேசுகையில், "நம்மிடம் ஆலோசிக்காமல் தமிழ்நாடு அரசு தொகையை ஒரே கட்டமாக 4000 ரூபாய் அதிகரித்துள்ளனர். இது பற்றி கே.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்கள் என்னிடம் கூறினார்கள். தமிழ்நாடு அதிகாரிகளிடம் பேசியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியானால் இருக்கட்டும், நமக்கும் 4000 ரூபாய் அதிகரிக்கலாம் என்றேன்.

கேரள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார்

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும், சபரிமலை சீசன் வர உள்ளது. அங்கிருந்து தான் அதிகமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் எங்கள் கஜானாவில் பணத்தை நிறைப்போம். இங்கிருந்து செல்பவர்களை அங்கு தொந்தரவு செய்தால், அங்கிருந்து வருபவர்களை நாங்கள் இங்கு தொந்தரவு செய்வோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களை அவர்கள் பறிமுதல் செய்தால், தமிழ்நாட்டு பஸ்களை நாங்கள் இங்கு பறிமுதல் செய்வோம்" என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/z6XstpZ

Post a Comment

0 Comments