கடந்த மே மாதம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதனிடையே, இந்த தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக நாடு முழுவதிலிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கின. அதிலும், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த புகார்களில் உண்மை இருக்கிறது என்பது தெரியவந்தது. அதனால், நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் சூடுபிடித்திருக்கிறது.
அதனால், அண்மையில் நடந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பதவியேற்கும் நிகழ்வு நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது, பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு உறுப்பினரும், பல்வேறு பிரச்னைகளை அடையாளப்படுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அந்த வரிசையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற, எம்.பி பப்பு யாதவ் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளும்போது, தனது சட்டைக்குள் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் #RENEET என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும், பதவி பிரமாணத்தின்போது 'பீகார் ஜிந்தாபாத்' என்று தனது உறுதிமொழியை ஆரம்பித்து, நீட்-யுஜி மறுதேர்வு மற்றும் பீகாருக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்து கோரிக்கை முழக்கங்களுடன் முடித்தார்.
प्रणाम पूर्णिया सलाम पूर्णिया जोहार पूर्णिया
— Pappu Yadav (@pappuyadavjapl) June 25, 2024
शपथ ग्रहण के साथ संसदीय जीवन की एक
और पारी शुरू हो गई
उद्देश्य है पूर्णिया मॉडल पूरे बिहार में सेवा,न्याय
और विकास की राजनीति का आदर्श बने!
शपथ ग्रहण के दौरान #ReNEET का डिमांड किया और बिहार को विशेष राज्य का दर्जा देने का मांग किया! pic.twitter.com/gPUiKbv4fh
அவரது முழக்கங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், `` நான் `என்ன சொல்ல வேண்டும்’ என்ற உங்களின் பாடம் தேவையில்லை. நீங்கள் ஒரு கட்சியின் ஆசிர்வாத்தால் வெற்றி பெற்றீர்கள். நான் தனித்து நான்கு முறை சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளேன்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/u8smwFO
0 Comments