`வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ - பிரதமர் மோடி
இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் இந்த ஜனநாயக திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்,
5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - தொடங்கியது வாக்குப்பதிவு!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. தற்போது வரை 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் இன்று 5ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல் உட்பட மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பிகார், ஒடிசாவில் தலா 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும் ஒடிசாவின் 35 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடக்கிறது. இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அடுத்தகட்ட தேர்தல்களில் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும், குறிப்பாக நகர பகுதியில் வசிக்கும் மக்கள் பெருமளவில் வாக்களிக்க வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/SwKeWrU
0 Comments