``அது அவரது அனுமானம்..!" - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ED மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கு மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில், கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 50 நாள்கள் சிறைவாசத்திலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரு பிரசார கூட்டத்தில் 'தற்போது ஜாமீனில் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறேன். 20 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்தால் நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை.' எனப் பேசினார்.

அவருடைய இந்த கருத்தை பா.ஜ.க கடுமையாக விமர்சித்தது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை, ``அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனைகளை மீறிச் செயல்படுகிறார். அவருடைய அந்த கருத்து நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளைத் தெளிவாக மீறுவதாகும். இது நீதித்துறையின், அரசுத் துறையின் முகத்தில் அறைந்ததாகும். எனவே, அவருடைய ஜாமீனை ரத்து செய்து கெஜ்ரிவாலைச் சிறையில் அடைக்க வேண்டும்" என ஜாமீனுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,``அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாங்கள் எந்த விதிவிலக்குகளையும் விதிக்கவில்லை. எங்கள் உத்தரவு தெளிவாக உள்ளது. நாங்கள் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய தேதிகளையும் குறித்திருக்கிறோம். இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறோம். அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்ற அவரின் கருத்து ஜாமீன் விதிமுறைகளை மீறலில்லை. அது அவருடைய அனுமானம். எனவே, இந்த மனுவிற்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/TPuRA6Q

Post a Comment

0 Comments