பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் திருப்பமா? - குற்றம்சாட்டும் மகளிர் ஆணையம்; கேள்வியெழுப்பும் குமாரசாமி!

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான ஹாசன் தொகுதி சிட்டிங் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமல்லாது அவரின் தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் வன்கொடுமை புகார்கள் வந்துகொண்டிருக்கிறது.

பிரஜ்வல் ரேவண்ணா (வலது ஓரம்)

இந்த விவகாரத்தை, மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. மேலும், இதில் உடனடி நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து கர்நாடக போலீஸுக்கு கடிதம் அனுப்பியது. இருப்பினும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீஸார் யாரும் தொடர்புகொள்ள முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

அதேமயம், பாலியல் வன்கொடுமை புகாரளித்த பெண் கடத்தப்பட்ட வழக்கில் ரேவண்ணா கைதுசெய்யப்பட்டார். இப்படியிருக்க, இந்த விவகாரத்தில் போலி போலீஸ் குழுவால் ஒரு பெண் கட்டாயப்படுத்தப்பட்டு போலியாக பாலியல் வன்கொடுமை புகார் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் கூறியிருப்பது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய மகளிர் ஆணையம்

தேசிய மகளிர் ஆணையத்தின் இத்தகைய கூற்றை எடுத்துக்கொண்ட கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, ``விசாரணை அதிகாரிகளே பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு சென்று மிரட்டுகிறார்கள். கூறுங்கள்... சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் அவர்களிடம் விபசார வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள் என்பது உண்மையில்லையா? இப்படித்தான் விசாரணை நடத்தப்படுகிறதா...

குமாரசாமி

பெண் புகார்தாரர் கடத்திச் செல்லப்பட்தாகக் கூறப்பட்ட விவகாரத்தில் மீட்கப்பட்ட பெண்ணை நீங்கள் எங்கே வைத்திருந்தீர்கள்... ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை... பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிடும் செயலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா..." என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். புகாரளித்த பெண் கடத்தப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரேவண்ணா, நேற்று பெங்களூரு மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/m27lzu0

Post a Comment

0 Comments