இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்த தாக்குதலில் இரான் ராணுவம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக வளாகத்தில் இரான் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என இரான் கூறியிருந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. இதற்கிடையே இரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர், கமல் கர்ராசி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது,``அணுக்குண்டை உருவாக்கும் திட்டம் எதுவும் இப்போது எங்களிடம் இல்லை.. ஆனால் இரானின் இருப்புக்கு ஒருவேளை அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுத விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இஸ்ரேலால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றால்.. யார் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற இரானின் அணு ஆயுத நிலைப்பாட்டை மாற்ற வேண்டி இருக்கும்." என இஸ்ரேலை எச்சரித்திருக்கிறார். இது பதற்றத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.
from India News https://ift.tt/UVnQ9Rh
0 Comments