ஆந்திர மாநிலம் ராஜாம்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பேசிய பிரதமர் மோடி,``காங்கிரஸ் தலைவர்கள் பிரித்தாளும் எண்ணங்கள் கொண்டுள்ளனர். நாட்டை துண்டு துண்டாகப் பார்ப்பது காங்கிரஸின் மனநிலை. காங்கிரஸ் வடகிழக்கு மக்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் நினைக்கிறார்கள். அப்படித்தான் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இது சரியா? தமிழ் கலாசாரம் பற்றி பேசும் தமிழக முதல்வருக்கு, தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக காங்கிரஸுடனான உறவை துண்டிக்க தைரியம் இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தி.மு.க செய்தி தொடர்பாளர், டாக்டர் எஸ்.ஏ.எஸ். ஹபீஸுல்லா,``காங்கிரஸின் சாம் பிட்ரோடாவின் கருத்தைப் போலவே கடந்த காலங்களில் பா.ஜ.க எம்.பி ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி அப்போது எதுவும் கூறாமல் மௌனித்திருந்தார். இப்போது அதே உதாரணத்தை காங்கிரஸ் தெரிவிக்கும்போது மட்டும் விமர்சிக்கிறார். சீனர்கள், பிரிட்டிஷ், ஆப்பிரிக்கர்களுடன் இந்தியர்களை ஒப்பிட்டுப் பேசிய சாம் பிட்ரோடாவின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.
என்றாலும், இந்த ஒப்பீடு என்பது stereotype (ஒரு குறிப்பிட்ட வகை மக்களைப் பற்றிய பொதுவான நம்பிக்கை) ஆனால், அவர் பன்முகத்தன்மை குறித்து அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது... இந்தியர்களாகிய நாம் வெவ்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்கள். ஒன்றிணைந்து இந்தியா என்ற ஒரு பெரிய தேசத்தை உருவாக்கியிருக்கிறோம் என்பது உண்மைதான். அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ்,``இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா அளித்த ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த ஒப்புமைகளிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலும் விலகிக் கொள்கிறது" என விளக்கமளித்தது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/JBokHh5
0 Comments