டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யுமான ஸ்வாதி மாலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அவரின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யும், செய்தி தொடர்பாளருமான சஞ்சய் சிங், ``நேற்று காலை ஸ்வாதி மாலிவால் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க அவரின் இல்லத்துக்குச் சென்றபோது, அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமார் ஸ்வாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்தே, ஸ்வாதி மாலிவால் 112 என்ற எண்ணில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் முழு சம்பவத்தையும் அறிந்துள்ளார் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அனைவரும் ஸ்வாதி மலிவாலுடன் நிற்கிறோம். இந்த விவகாரத்தை முதல்வர் தீவிரமாக எடுத்துக் கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சி தவறானவர்களை ஆதரிக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், எம்.பி ஸ்வாதி மாலிவாலின் புகாரை இதுவரை முறையாக காவல்துறை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், தேசிய மகளிர் ஆணையம், காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை காவல்துறையிடம் கேட்டிருப்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/xSuDrbo
0 Comments