பத்ம விருதுகள் அறிவிப்பு!
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் குடியரசு தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 132 பேருக்கு இம்முறை பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரை கலைஞரும் நடனக் கலைஞருமான வைஜெயந்திமாலா(பத்ம விபூஷண்), நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம்(பத்ம விபூஷண்), கலை துறையில் நீண்ட பங்காற்றிய விஜயகாந்த்(பத்ம பூஷண்), வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் (பத்மஸ்ரீ), ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா (பத்மஸ்ரீ), ழுத்தாளர் ஜோ டி குரூஸ் (பத்மஸ்ரீ), நாதஸ்வர கலைஞரான சேசம்பட்டி டி.சிவலிங்கம் (பத்மஸ்ரீ) உள்ளிட்டோருக்கு பத்ம விருதகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/ueUZ6F1
0 Comments