`காங்கிரஸுடனான 50 ஆண்டுக்கால உறவை முறித்துக்கொண்டேன்!' - சிவசேனாவில் இணைந்த மிலிந்த் தியோரா

காங்கிரஸ் கட்சியின் இணை பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா, இதற்கு முன்பு தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் கடந்த முறை இந்தத் தொகுதியில் சிவசேனாவின் அர்விந்த் சாவந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே வரும் மக்களவை தேர்தலில் அர்விந்த் சாவந்த் `சிவசேனா (உத்தவ்) சார்பாகப் போட்டியிடுவேன்' என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் தெற்கு மும்பை தொகுதியை சிவசேனாவிற்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் கட்சியும் சம்மதித்துவிட்டது. இதையடுத்து மிலிந்த் தியோரா நேற்று முன்தினமே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் சேர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

முதல்வருடன் மிலிந்த் தியோரா

ஆனால் அது குறித்து மிலிந்த் தியோரா முறைப்படி எதையும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால் நேற்று மிலிந்த் தியோரா தனது சோஷியல் மீடியா பக்கத்தில், ``இன்று எனது அரசியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயம் முடிகிறது. காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்துள்ளேன், கட்சியுடனான எனது குடும்பத்தின் 55 ஆண்டுக்கால உறவை முறித்துக் கொண்டேன்.

காங்கிரஸ்

பல ஆண்டுகளாக தங்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சிப்பாதையில் செல்லப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் மும்பையில் உள்ள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமான வர்ஷாவில் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக மிலிந்த் தியோரா அளித்த பேட்டியில், ''பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் நாட்டிற்கான தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். எனவே அவர்களுடன் சேர விரும்புகிறேன். முதல்வர் மக்களின் வலி மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்தவர். எனவே அவரது கரத்தை வலுப்படுத்த விரும்புகிறேன். மிகவும் சவாலான காலக்கட்டத்தில் நான் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். எனது தந்தை இருந்த காலத்தில் இருந்த காங்கிரஸ், இப்போது முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. அவர்களின் கவனம் பிரதமர் மோடியை எதிர்ப்பதில் மட்டுமே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்த அதே கட்சி, தொழிலதிபர்களை துஷ்பிரயோகம் செய்து, 'தேச விரோதிகள்' என்று கூறி வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சிந்தியா

ஆனால் ராகுல் காந்தியின் புதிய நியாய யாத்திரையை திசை திருப்பவே மிலிந்த் தியோரா இவ்வாறு செய்வதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்திக் படேல், அஸ்வனி குமார், அனில் ஆன்டனி போன்ற முக்கிய இளம் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியிருக்கின்றனர்.



from India News https://ift.tt/hpK0Ary

Post a Comment

0 Comments