ரயில் நிலையங்களில் மோடி செல்ஃபி பூத்; எவ்வளவு செலவானது? - RTI பதிலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனமும்

நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பிரதமரின் படத்தோடு செல்ஃபி பாயின்டுகள் நிறுவப்படும் என வடக்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான விவரங்களைப் பெற ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான அஜய் போஸ் ஆர்.டி.ஐ-யின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கும் மத்திய ரயில்வே துணைப் பொது மேலாளர் அபய் மிஸ்ரா, "மும்பை, புசாவல், நாக்பூர், புனே, சோலாப்பூர் ஆகிய ஐந்து ரயில்வே மண்டலங்களில் உள்ள 50 ரயில் நிலையங்களில் மோடி படத்துடன் கூடிய 3டி செல்பி பாயின்டுகள் நிறுவப்பட்டிருக்கின்றன.

மோடி செல்பி பூத்

இதில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், கல்யாண், நாக்பூர், பெதுல் உள்ளிட்ட 30 ஏ வகை ரயில் நிலையங்களில் தற்காலிக செல்ஃபி பாயின்டுகளும், கர்ஜத், கசரா, லத்தூர், கோபர்கான் போன்ற 20 சி வகை ரயில் நிலையங்களில் நிரந்தர செல்ஃபி பாயின்டுகள் நிறுவப்பட்டுள்ளன. ஏ வகை ரயில் நிலையங்களில் நிறுவப்படும் தற்காலிக செல்ஃபி பாயின்ட் ஒன்றுக்கு 1.25 லட்சமும், சி வகை ரயில் நிலையங்களில் நிரந்தர செல்பி பாயிண்டுகள் அமைக்க ஒரு பாயின்டுக்கு ரூ.6.25 லட்சமும் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் 100 வெவ்வேறு ரயில் நிலையங்களில் பிரதமரின் படத்தோடு செல்ஃபி பாயின்டுகள் நிறுவப்படும். சில நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்ஃபி பாயின்டுகள் அமைக்கப்படும். உதாரணமாக, டேராடூன், அம்பாலா, புது டெல்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் ஆகிய இடங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் மூன்று செல்ஃபி பாயின்டுகள் நிறுவப்பட உள்ளன. திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்பு, வேலூர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் பிரதமரின் 3டி செல்பி புகைப்படக் கூடங்கள் அமைக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி செல்பி பூத்

இதைத் தொடர்ந்து சாதாரண விளம்பர செல்பி பாயின்டுகள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இவ்வளவு பணத்தைச் செலவழிப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ரயில் நிலையங்களில் மோடியின் 3D செல்ஃபி பாயின்ட் நிறுவுவதன் மூலம் வரி செலுத்துவோரின் பணத்தை முற்றிலும் வீணடிக்கிறார்கள். மோடி அரசு மாநிலங்களுக்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியும் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த மலிவான தேர்தல் ஸ்டன்ட்களுக்காக பொதுமக்களின் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்ய அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது!" என விமர்சித்திருக்கிறார்.

ஆர்.டி.ஐ பதில்

சிவசேனா கட்சி(உத்தவ் அணி) எம்.பி பிரியாங்கா சதுர்வேதி, "இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் யாராவது ஒருவர் ரயில் பயணம் குறித்த மோசமான அனுபவம் பற்றிப் புகார் சொல்லாத நாளே இருப்பதில்லை. இருந்தும் மக்கள் ரயில் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது மத்திய ரயில்வேக்கு அவமானம்" என்றும், காங்கிரஸ் தலைவர் சசிதரூர்,"இது அரசாங்க நிதியை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் செயல்" என விமர்சித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/EuWbN38

Post a Comment

0 Comments