பெரும்பாலும் வன்முறை, இனக்கலவரம் என பாதிக்கப்படும், வடகிழக்குப் பகுதியில் உள்ள மிசோராம் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பலரும் இளம் தலைமுறையினராக இருக்கின்றனர். இது மிசோராம் அரசியலுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதாக அமைந்திருக்கிறது. அதோடு பெண்களுக்கும் மக்கள் அதிக அளவில் வாய்ப்புக் கொடுத்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் 3 பெண்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர். அவர்களில் 32 வயதாகும் வன்னேசங்கியும் ஒருவர். இவரின் வெற்றி, மிசோராமில் இளம் தலைமுறையினர், குறிப்பாக பெண்கள் அரசியலுக்கு வர ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிசோராம் மாநிலம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 4 பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்போது நடந்துள்ள தேர்தலில் 3 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மிசோராம் தேர்தல் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது. இதில் பேரில் வன்னேசங்கி 1,414 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.
பேரில் வன்னேசங்கி கவுன்சிலராக இருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் இரண்டரை லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மற்றொரு பெண்ணான லால்ரின்புயி இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்டு இப்போது வெற்றி பெற்று இருக்கிறார். அதோடு முதுகலைப் பட்டப்படிப்பும் படித்து இருக்கிறார். இவர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். பெண்களில், மாநிலத்தின் மிக இளம் வயது எல்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மிசோராமில் பெண்கள் பொதுவாக அரசியல் பங்களிப்பில் அதிக ஆர்வம் காட்டாமலேயே இருக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களுக்கு இத்தேர்தல் ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளது.
from India News https://ift.tt/L8MJxp6
0 Comments