அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு!
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன், அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று மூன்றாவது நாளாகச் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
from India News https://ift.tt/pAZ6xjL
0 Comments