நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடிக்க, அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகன் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில், திரிஷாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வந்து, அதற்காகத்தான் பயன்படுத்திய `வார்த்தை பிரயோகத்தால்' வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறார் நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு.

This is what DMK goons do. Use a foul language. But this is what they are taught. To insult a woman. Sorry can’t speak your cheri language but I would suggest wake up and look what was spoken and action taken. And if DMK does not teach you about laws, then shame on you being a… https://t.co/FC5d7pl9Gu
— KhushbuSundar (@khushsundar) November 21, 2023
நடிகை திரிஷா - மன்சூர் அலிகான் விவகாரத்தில் கடுமையாகக் கொந்தளித்த நடிகை குஷ்பு, ``மன்சூர் அலிகானின் தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தப் பேச்சு. பொதுவெளியில் பெண்களை மதிக்கத் தெரியவில்லை என்றால், வீட்டிலுள்ள பெண்களை எப்படி மதிப்பார்கள்?'' என கடுமையாக சாடியிருந்தார். அந்த நிலையில், எக்ஸ் தளத்தில் நடிகை குஷ்புவை டேக் செய்து பதிவிட்ட நபர் ஒருவர், ``மணிப்பூரில் பெண்கள் அம்மணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பு, மகளிர் ஆணையம் திரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறது. இதை வச்சாவது தாமரைக்கு ரெண்டு ஓட்டு தேறுமாங்கிற நப்பாசையில் இப்படி செய்கிறார்கள்" என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார்.
உடனே அந்தப் பதிவுக்கு எதிர்வினையாற்றிய குஷ்பு, ``தவறான மொழியைப் பயன்படுத்துவதைத்தான் தி.மு.க குண்டர்கள் செய்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும், உங்கள் `சேரி மொழி'யை என்னால் பேச முடியாது...." என கடுமையாகப் பதிவிட்டார்.
மணிப்பூரில் பெண்கள் அம்மணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த @khushsundar மகளிர் ஆணையம் திரிசாவுக்காக எழுந்து வந்திருக்கிறது
— shanmugamchinnaraj (@shanmugamchin10) November 21, 2023
இதை வச்சாவது தாமரைக்கு ரெண்டு ஓட்டு தேறுமா ங்கிற நப்பாசையில்
மற்றபடி மகளிர் நலனெல்லாம் அந்த கட்சியில மயிரு நலன்
தடவுவதற்கே கூட்டம் போடுற சங்கிகள்
இந்த நிலையில், நடிகை குஷ்பு `சேரி மொழி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குஷ்புவின் பதிவைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகையும், முன்னாள் பா.ஜ.க நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், ``இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன். சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். "சேரி மொழியை" பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்!" என வலியுறுத்தினார்.
இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் செரி என்ற பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன். செரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக… https://t.co/3W8gQIBqr6
— Gayathri Raguramm (@Gayatri_Raguram) November 21, 2023

We strongly condemn the use of the term ‘Cheri language’ by Mrs Khushbu!
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) November 22, 2023
In Mrs Khushbu’s response to a tweet she labels the use of foul language to insult women as ‘Cheri language’. Cheri is the Tamil word for Dalit ghettos, the place that has witnessed inter-generational… pic.twitter.com/3ygT9sTYfe
அதேபோல குஷ்புவின் வார்த்தை பயன்பாட்டுக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், ``குஷ்புவின் ‘சேரி மொழி’ என்ற சொல்லை வன்மையாகக் கண்டிக்கிறோம்! அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்!" என தெரிவித்தனர்.
தொடர்ந்து, சி.பி.எம் கட்சி செய்தித்தொடர்பாளர் கனகராஜ், ``நீங்கள் தவறிழைக்கிறீர்கள் குஷ்பு! "Cheri language" என்பதன் பொருளறிந்துதான் பயன்படுத்தினீர்களா?அறியாமல் என்றால் அந்த பதிவை நீக்கிவிடுங்கள். இரண்டாவதாதாக மன்சூர் அலிகான் வீட்டுப் பெண்களின் மேன்மை அவரின் நடத்தையின்பாற்பட்டதா?முதலாவது சாதி ஆதிக்கம். இரண்டவது ஆணாதிக்கம்!" என கண்டனம் தெரிவித்தார்.
நீங்கள் தவறிழைக்கிறீர்கள் @khushsundar !
— K Kanagaraj (@cpmkanagaraj) November 21, 2023
"Cheri language"என்பதன் பொருளறிந்துதான் பயன்படுத்தினீர்களா?
அறியாமல் என்றால் அந்த பதிவை நீக்கிவிடுங்கள்.
இரண்டாவதாதாக மன்சூர் அலிகான் வீட்டுப் பெண்களின் மேன்மை அவரின் நடத்தையின்பாற்பட்டதா?
முதலாவது சாதி ஆதிக்கம்.
இரண்டவது ஆணாதிக்கம். pic.twitter.com/ZufaWb03QI
தொடர்ச்சியாக கண்டனம் வந்த நிலையில் ட்வீட்டை நீக்காமல் அதை சமாளிப்பதற்காக குஷ்பு கொடுத்த விளக்கம் இன்னும் முகம் சுழிக்க வைத்தது. அதாவது, ``எனது ட்வீட்டை பார்த்தை சீற்றமெடுக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லித்தருகிறேன். `சேரி' என்பது பிரஞ்சு மொழியில் `அன்பானவர் அல்லது நேசிப்பவர்' என்று பொருள்படும் ஒரு வார்த்தை. நான் அந்த சூழலில் அந்த அர்த்தத்தில்தான் கூறினேன்" என ஒரு விளக்கம் அளித்தார்.
அதற்கு பலரும் பலவிதமாக ஒவ்வொரு மொழியில் உள்ள பிற அர்த்தங்களை பதிவிட்டு, `குஷ்புக்கு சரியாக முட்டுக்கொடுக்க கூடத் தெரியவில்லை! ஒழுங்காக மன்னிப்பு கேளுங்கள்!' என அவர் பாணியிலேயே கண்டனம் தெரிவித்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாத குஷ்வு சிரிப்பு எமோஜிக்களை மட்டும் தனது எக்ஸ் தளத்தில் பதிலாக கொடுத்து சமாளித்தார்.
How funny to see an outrage from a bunch of selective crowd over my language in my tweet. The same are mute spectators to an outrage of women modesty. Would like to educate the educated illiterates a little about it. My tweet is laced with sarcasm. 'Cheri' is a word in French… pic.twitter.com/xVifEuTuz8
— KhushbuSundar (@khushsundar) November 22, 2023
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியல் அணித் தலைவர் ரஞ்சன் குமார் ``விஷமத் தனமான பேச்சுக்கு குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நாளை மாலை 5 மணிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீடு முற்றுகையிடப்படும். தமிழகத்தில் அவர் எங்கும் நடமாட முடியாது. பட்டியல் சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் குஷ்பு ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு ஏன் குரல் கொடுக்கவில்லை? பா.ஜ.க என்ற சாக்கடையில் சேர்ந்ததால், குஷ்பு இப்படி பேசுகிறார். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்!" எனத் தெரிவித்தார். இதையடுத்து சென்னை சாந்தோமில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/D5RuHew
0 Comments