இந்து சமய அறநிலையத்துறைமீது பா.ஜ.க வைக்கும் குற்றச்சாட்டு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், மீனவர் பிரச்னைக்கான தீர்வு, நீலகிரியில் செய்துவரும் அரசியல் முன்னெடுப்புகள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...
“தமிழ்நாடு பா.ஜ.க தொடர்ந்து அறநிலையத்துறையை மட்டும் குறிவைப்பது ஏன்?”
“அறம் சார்ந்தவர்கள் கையிலிருந்தால் நாங்கள் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம். பன்னிரெண்டு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. அந்த நிலங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்ற கணக்கே தெரியவில்லை. மற்ற மதப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லும் முதல்வர் ஏன் இந்துப் பண்டிக்கைக்கு வாழ்த்துச் சொல்வதில்லை. கடவுள் இல்லை, சாமி கும்பிட மாட்டோம், சாமிக்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லை என்பவர்கள் ஏன் கோயிலை மட்டும் நிர்வகிக்க வேண்டும். அதை ஒரு அமைப்பிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டியதுதானே.”
“ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்களே?”
“கடந்த ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட குடமுழுக்குகளை இப்போது நடத்துகிறார்கள். அறநிலையத்துறைக்காக தி.மு.க எதுவுமே செய்ததில்லை. பல ஆயிரம் கோயில்கள் ஒருகால பூசைகூட செய்யாமல் இருக்கின்றன. எந்தக் கோயிலில் வருமானம் அதிகாமக வருகிறதோ அதைத்தான் இவர்கள் கையில் எடுக்கிறார்கள்.”
”மக்களிடமிருந்து அப்படி எந்தக் கோரிக்கையும் வரவில்லையே?”
“மக்கள் ஆதங்கத்தோடுதான் இருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் எப்படி வெளியே வரும். அதை எங்கள மாதிரி ஆட்களிடம் சொல்கிறார்கள். அதை நாங்கள் வெளியில் கொண்டு வருகிறோம்.”
“தமிழ்நாட்டில் மத அரசியலை முன்னெடுக்க நினைக்கிறதா பா.ஜ.க?”
“சமூகநீதி பத்திப் பேச திமுக-வுக்கு எந்த அருகதையும் இல்லை. சமூகநீதிக்கு அர்த்தம் கண்டுபிடித்தவர்கள் மாதிரி, இவர்கள் பேசுவார்கள். ஆனால், களத்தில் ஜீரோ. எஸ்.சி.எஸ்.டி விடுதிகளுக்குச் சென்று பாருங்கள் திராவிட மாடல் ஆட்சியில் லட்சணத்தை அங்கே பார்க்க முடியும். நாகரீக சமூகத்தின் துயரம் வேங்கை வாசல். அந்தச் சம்பவம் நடந்து ஓராண்டுக்குமேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க-வின் பட்டத்து இளவரசராவது மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கலாம். மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து சாதிய மோதல் அதிகரித்திருக்கிறது. அதைத் திராவிட மாடல் அரசு ஊக்குவிக்கிறாது. இதுதான் இவர்களின் சமூக நீதி. அமைச்சரவையில் இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் படிநிலையில் கீழேதான் இருக்கிறார்கள். சமூக நீதி பேசும் இவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதல்வராக, பொதுச்செயலாளராக கொண்டு வருவார்களா. சமூகநீதியின் ஹீரோ பா.ஜ.க-தான்”
“அப்படியானால் ஏன் மோடியின் அமைச்சரவையில் இஸ்லாமியரோ கிறித்துவரோ இல்லை?”
“இஸ்லாமியர் ஒருவர் இருந்தார். அவரின் ராஜ்யசபா பதவி முடிந்துவிட்டது. சரியான ஆட்கள் வரும்போது அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும்”
“சாதிக்கு தி.மு.க, பா.ஜ.க-வுக்கு மதம் எனச் சொல்லலாமா?”
“அப்படி முடியாது. எல்லோரும்தான் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கிறார்கள். இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக பா.ஜ.க இருக்கிறது அதனால்தான் எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.”
“விளையாட்டை அரசியலாக்கப் பார்க்கிறீர்களா?”
“விளையாட்டில் என்ன அரசியல் செய்ய முடியும்?. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட் அமைப்புதான் எல்லாம் முடிவு செய்திருக்கிறார்கள்”
“தமிழ்நாடு மீன்வர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?”
“அதற்கான நடவைக்கை தொடர்ந்து எடுத்து வருகிறோம். 2014-க்குப் பிறகு தமிழ்நாடு மீனவர்கள்மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு குறைந்திருக்கிறது. மீனவர்கள் சுடப்பட்டு இறந்தது அதிகம். மோடி அரசு வந்த பிறகு தமிழ்நாடு மீனவர்கள் துப்பாக்கியால் சுட்டு இறந்ததாக செய்தியே இல்லை. இலங்கை அரசால் கைது செய்யப்படுபவர்களை மீட்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பறிமுதல் செய்யப்படும் படகுகளை அவர்கள் அரசுவுடமை ஆக்கும் வகையில் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். விரைவில் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் சுமூகத் தீர்வைக் கொண்டு வருவோம்."
“டி.டி. தமிழ் என்பதைவிட பொதிகை என்பது நல்ல பெயர் தானே?”
“நல்ல பெயர் தான். தூர்தர்ஷன் எப்படி இருந்த சேனல். காங்கிரஸ் ஆட்சியில் தனியார் நிறுவனங்கள் உள்ளே வந்த பிறகு அதன் செயல்பாடு சுருங்கிவிட்டது. எனவே, அதை மறுகட்டமைப்பு செய்ய முடிவு செய்தோம். டிஜிட்டலாக அதை மேம்படுத்தியிருக்கிறோம். புதிய நிகழ்ச்சிகளைக் கொண்டுவரவுள்ளோம். எனவே, அதற்கேற்ப பெயரையும் மாற்ற முடிவு செய்தோம். அவ்வளவுதான்.”
“நீலகிரியில் போட்டியிட இருக்கிறீர்களா?”
“நீலகிரி கோவை சேலம், வேலூர் தென் சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை என எட்டுத் தொகுதியில் மட்டும் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறோம். என்னை நீலகிரியின் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து வருகிறேன். அதற்காக அங்கே போட்டியிடப் போகிறேன் எனச் சொல்ல முடியாது. அது தலைமையின் முடிவு. தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்.”
இந்த பேட்டியின் முதல் பாகத்தை படிக்க...
``ஆளுநர் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்; பின்பற்றினால் அரசுக்குத்தான் நல்லது” - எல்.முருகன் அட்வைஸ்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/QA9KZ4i
0 Comments