``பணத்திற்காக உதயநிதி சொல்லியபடி நடிக்கிறார் கமல்ஹாசன்!” - அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்’ யாத்திரை கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அண்ணாமலை, “கோவை பாஜகவின் கோட்டை. 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கோவைக்கு பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவிற்கான தேர்தல்.

அண்ணாமலை

தனி மனிதனுக்கான தேர்தல் அல்ல. மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக மீது ஊழல் புகார்களை சொல்லி வருகிறார். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தியாவில் இதுபோன்ற ஊழல் அமைச்சரவையை பார்த்திருக்க முடியாது. தற்போது மகனுக்கும், மருமகனுக்குமான ஆட்சி நடக்கிறது. அதிகாரிகள் அவர்களுக்கு வேலை செய்கிறார்கள்.

மண்ணை, மக்களை, கலாசாரத்தை மோடி நேசிக்கிறார். திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தீவிரவாதம், மின்வெட்டால் கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மின்கட்டண உயர்வால் சிறு தொழிற்சாலைகளை திமுக ஆட்சி நசுக்கிவிட்டது. கோவையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது. கட்சிக்கு கூட்டம் வரவில்லை என பேசியிருக்கிறார். 2021ம் ஆண்டே சினிமாவில் யார் நடிக்கிறார்கள், நிஜத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து வானதி சீனிவாசனை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள்.

அண்ணாமலை

கமல்ஹாசன் நன்றாக நடிப்பதை பார்க்க விக்ரம் படத்துக்கு கூட்டம் வருகிறது. திமுகவை தலைகீழாக எதிர்த்த கமல்ஹாசன், பணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் சொல்லியபடி நடிக்கிறார். கமல்ஹாசன் கால் தூசிக்கு உதயநிதி ஸ்டாலின் சமமா. கமல்ஹாசன் தன்மானத்தை உதயநிதி மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸிடம் அடகு வைத்து விட்டு கோவையில் போட்டியிடுவதாக சொல்கிறார்.

பெரும்பாலான பெண்களுக்கு உரிமை தொகை வரவில்லை. சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜக-வினர் 400 பேர்  புகார் அளித்தும், பட்டத்து இளவரசர் மீது 1 வழக்கும் இல்லை. சனாதனத்தை இழிவுபடுத்திய திமுக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் டெபாசிட் இழந்து தோற்க வேண்டும். 33% மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால் பிரதமரை கடவுளாக பார்க்க வேண்டும்.

அண்ணாமலை

கோவையை தொடர்ந்து பாஜக, ஆன்மிகம், நேர்மை கோட்டையாக வைக்க வேண்டும்.” என்றார்.  அதிமுக, பாஜக கூட்டணி முறிந்த நிலையில், தனது பேச்சில் அண்ணாமலை ஒரு இடத்தில் கூட அதிமுகவை விமர்சிக்கவில்லை. செய்தியாளர்கள் கேட்டபோது கூட, “இதுகுறித்து தேசிய தலைமை விளக்கமளிக்கும். அதன்பிறகு விரிவாக பேசுகிறேன்.” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/NfZvtxj

Post a Comment

0 Comments