"சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம்பேர் ஆதரவளித்துள்ளனர்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், ``எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர், ஜெயலலிதா காலத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருந்தனர், தற்போது எடப்பாடியார் காலத்தில் 2.44 கோடி தொண்டர்கள் உருவாகி உள்ளனர். இன்று எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்மசொப்பனமாக எடப்பாடியார் உள்ளார்.
எடப்பாடியார் தலைமையில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 15 லட்சம் பேர் மைதானத்திற்கு வந்தனர். 35 லட்சம் பேர் வெளியில் இருந்தனர். மேலும், தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் மாநாட்டை வாழ்த்தினார்கள். இது குறித்து உளவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளதால், தி.மு.க அரண்டு போயிருக்கிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர். ஸ்டாலினுக்கு 14 சதவிகிதம் பேர் மட்டும் ஆதரவளித்து கடைசி இடத்தில் தள்ளப்பட்டுள்ளார். இந்து பண்டிகையான ஓணத்திற்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர், இந்து பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூற மறுத்து தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்.
இவர் எப்படி இந்தியா கூட்டணியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்... அவர் காண்பது பகல் கனவாகும், இன்று அதிகாரிகள் மனமுடைந்து மத்திய அரசு பணிக்கு திரும்புகின்றனர்.
தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடியார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்தியில் மோடி பிரதமராக வருவார், தமிழகத்தில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவது நிச்சயம்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நீடிக்காது. ஆயுள் காலம் முடியவுள்ளது. இந்த அரசின்மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மீண்டும் எடப்பாடியார் எப்போது வருவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/h3Z9xPu
0 Comments