மக வகஷ அகடய அழகக ஸகடச - ஒர கடடணயல உளள இரவற கடசகள உடநத பனனண!

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்க விடாமல் சரத் பவார் தடுத்தார். சரத் பவாரின் இச்செயலால் இன்றைக்கு சரத் பவார் தனது கட்சியில் செல்வாக்கை இழந்திருப்பதோடு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கட்சியை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் சேர்ந்துதான் போட்டியிட்டன. தேர்தலுக்கு பிறகு தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டும் என்று உத்தவ் தாக்கரே அடம் பிடித்தார். அவரின் பதவி ஆசையை பயன்படுத்திக்கொண்ட சரத் பவார் உடனே சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகாவிகாஷ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியமைத்தன. உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற சில மாதங்களில் கொரோனா தலைதூக்கியது. அதோடு உத்தவ் தாக்கரேயிக்கும் முதுகு தண்டுவட பிரச்னையால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டில் இருந்து கொண்டே நிர்வாகத்தை கவனித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உத்தவ் தாக்கரே மீது அதிருப்தியில் இருந்த சில சிவசேனா தலைவர்களின் துணையோடு சிவசேனாவை பிரிக்க தேவேந்திர பட்னாவிஸ் திட்டம் தீட்டினார் என்கிறார்கள். ஒரு ஆண்டுக்கும் மேல் நடந்த மறைமுக பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் நிறைவுக்கு வந்தது. ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுள்ளார். ஏக்நாத் ஷிண்டேயிடம் சிவசேனா முற்றிலுமாக வந்துவிட்டது.

இதனிடையே, தற்போது நடத்தப்பட்டு வரும் சில கருத்துக்கணிப்புகளில் மகா விகாஷ் அகாடிக்கு சாதகமான முடிவுகளே வருகிறது என்கிறார்கள் மகராஷ்டிரா அரசியல் பார்வையாளர்கள். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. மகாராஷ்டிராவில் 48 எம்.பி.தொகுதிகள் இருக்கிறது. எனவே மகாவிகாஷ் அகாடி இணைந்து போட்டியிட்டால் அது பா.ஜ.க.வுக்கு பாதகமாக முடிந்துவிடும் என்பதால் மகாவிகாஷ் அகாடியை உடைக்கும் பணியில் பா.ஜ.க.மறைமுக வேலையில் ஈடுபட்டது என்கிறார்கள்.

அஜித் பவார் ஏற்கனவே கட்சியில் தன்னை ஓரங்கட்டி வருவதாக கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ``அஜித் பவாரை சரத்பவார் மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவராக்க விரும்பவில்லை. அஜித் பவார் தனக்கு தேசிய அரசியல் தேவையில்லை என்று தெரிவித்திருந்தார். அதோடு அஜித் பவார் கட்சியில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அதனை இன்றைக்கு அஜித் பவார் நிரூபித்தும் இருக்கிறார்” என்றார்.

சரத் பவார் - அஜித் பவார்

அஜித்பவார் அளித்துள்ள பேட்டியில், ``தேசியவாத காங்கிரஸ் முழுக்க ஆட்சியில் சேர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். அஜித் பவார் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினால்தான் உண்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிய வரும்.

பா.ஜ.க நினைத்த படி இரண்டு கட்சிகளை பிரித்துவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ``சரத் பவார் இப்போது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நேரத்தில் அவரின் கட்சியை உடைப்பதன் மூலம் சரத் பவார் தனது கட்சி விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவார். அவரால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியாது” என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் விலகி இருப்பதால் ஜிதேந்திர அவாட் என்பவரை புதிய எதிர்க்கட்சி தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.



from India News https://ift.tt/pS9bcj8

Post a Comment

0 Comments