கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சியினர் இப்போதே தேர்தல் அரசியலில் களமாடி வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் பணிகளுக்காக அண்மையில் கர்நாடகாவுக்கு வந்து சென்றிருந்த பிரதமர் மோடி, மீண்டும் அங்கு செல்லவிருக்கிறார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, ``கர்நாடகாவுக்கு பிரதமர் வரட்டும் அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் வந்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என்று நூறு முறை சொன்னாலும், அது நடக்காது என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். மக்கள் அவரை நம்பமாட்டார்கள். ஹிட்லர், முசோலினி, பிராங்கோவுக்கு என்ன ஆனது.
சில காலம் அடக்குமுறை செய்த அவர்களுக்கு என்ன ஆனது... அது போலதான் பிரதமர் மோடி சில நாள்கள் மட்டும் இப்படியே நடமாடுவார்" எனப் பேசினார்.
சித்தராமையாவின் இத்தகைய பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுக்கும் மோடியின் ஆளுமை தெரியும். இதுபோன்ற அறிக்கையால் அவருக்கு எந்தத் தீங்கும் இருக்காது. குஜராத்தில்கூட இப்படித்தான் பேசினார்கள். ஆனால், அவர் அதிகபட்ச வாக்குகளுடன்தான் வெற்றி பெற்றிருக்கிறார். அதுதான் இங்கும் நடக்கும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Vu2j0P5
0 Comments