நாய், பூனை போன்ற வீட்டுப் பிராணிகளை வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகம். அதிலும் நாய் வளர்ப்பு என்பது மன மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாது வீட்டு காவலுக்கும் உதவியாக இருக்கும். அதிலும் பெரு நகரங்களில் விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பதை கவுரவமாகவும் கருதுகின்றனர்.
மறுபுறம், தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருவனந்தபுரம் மாநகராட்சி ஒரு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. அந்த தீர்மானத்தின்படி ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நாய்கள் வளர்த்தால், அது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்கக்கூடாது என, ஹெல்த் ஸ்டாண்டிங் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேநேரம் வியாபார ரீதியாக நாய் வளர்ப்பவர்களுக்கு இரண்டு நாய்க்கு மேல் வளர்க்க தடையேதும் இல்லை எனவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி ஒரு வீட்டில் இரண்டுக்கு மேல் நாய்கள் வளர்க்க வேண்டுமானால் அதற்காக சிறப்பு அனுமதி கோரி மாநகராட்சிக்கு மனு அளிக்க வேண்டும், அந்த மனு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் மாநகராட்சி கவுன்சிலுக்கு மட்டுமே உண்டு எனவும் ஹெல்த் ஸ்டாண்டிங் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/o1fSJpy
0 Comments