மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நாக்பூரில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவையும், உத்தவ் தாக்கரேவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சட்டமன்றத்தின் கடைசி நாளில் கூட உத்தவ் தாக்கரேயையும், அவரின் மகன் ஆதித்ய தாக்கரேயையும் விட்டுவைக்கவில்லை. உத்தவ் தாக்கரே, அவரின் மகன் மீது போலீஸ் விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இது குறித்து குறிப்பிட்டு பேசிய ஆதித்ய தாக்கரே தன்னைக்கண்டு பயந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு இந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து சென்றதை தான் பார்த்ததில்லை என்றும், ஆளும் கட்சியினரே இது போன்று அவையில் போராட்டம் நடத்துவதை இதற்கு முன்பு கண்டதில்லை என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த தேவேந்திர பட்னாவிஸ், ``அவரின் தந்தைக்கே ( உத்தவ்) நாங்கள் பயப்படவில்லை. அவரிடமிருந்து 50 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வந்து ஆட்சியமைத்திருக்கிறோம். மும்பை பற்றி எரியும் என்று அவர்(உத்தவ்) சொன்னார். ஆனால் ஒரு தீக்குச்சி கூட பற்றவில்லை'' என்று தெரிவித்தார்.
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020-ம் ஆண்டு அடுக்கு மாடி கட்டடத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. இச்சம்பவத்தில் ஆதித்ய தாக்கரேயிக்கு தொடர்பிருக்கிறது என்று பா.ஜ.க உறுப்பினர் நிதேஷ் ரானே குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவரின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/6qJeuF3
0 Comments