உத்தரப்பிரதேச மாநிலம், கலிலாபாத் பகுதியிலிருக்கும் காவல் நிலையத்துக்கு அந்த மாநில காவல்துறை ஐ.ஜி பரத்வாஜ் திடீரென ஆய்வுக்குச் சென்றார். காவல் நிலையத்தை பார்வையிட்டப் பிறகு ஓர் அதிகாரியை அழைத்து துப்பாக்கியில் எப்படி சுட வேண்டும் என்று கேட்டார். அவரும் சுட்டுக்காட்டினார். உடனே மற்றொரு சப் இன்ஸ்பெக்டரை அழைத்து எப்படி துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பவேண்டும் என்று செய்து காட்டும்படி கேட்டுக்கொண்டார். சப் இன்ஸ்பெக்டரும் பழங்கால குழல் துப்பாக்கியில் தோட்டாக்களை முன்பகுதி வழியாக உள்ளே போட்டார். இதனைப் பார்த்த ஐ.ஜி அதிர்ச்சியாகிவிட்டார். அருகில் நின்ற போலீஸ் அதிகாரிகளும் சப் இன்ஸ்பெக்டரின் செயலைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.
அதையடுத்து, ``சரி தோட்டாதான் நிரப்பவரவில்லை, துப்பாக்கியால் சுடத்தெரியுமா?" என்று ஐ.ஜி கேட்டார். அதோடு தோட்டா இல்லாத துப்பாக்கியால் சுடும்படி கேட்டுக்கொண்டார். சப் இன்ஸ்பெக்டரும் வெறும் துப்பாக்கியால் மேல் நோக்கிச்சுட்டார். இந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுவிட்டனர். இது மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், ``தோட்டாக்களைக்கூட நிரப்ப தெரியாத சப் இன்ஸ்பெக்டரால் எப்படி குறிபார்த்து சுட முடியும்?" எனவும், ``பயிற்சியில் தோட்டாக்களை நிரப்பக்கூட கற்றுக்கொடுக்கவில்லையா?" என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
சப் இன்ஸ்பெக்டரின் வீடியோவை பார்த்த சமாஜ்வாடி கட்சி ட்விட்டரில், ``யோகிஜி போலீஸாருக்கு துப்பாக்கியில் தோட்டா நிரப்பக்கூட தெரியவில்லை. துப்பாக்கியின் முன்பகுதி வழியாக தோட்டாவை நிரப்பியது அறியாமையின் உச்சம். ஏழைகள் மற்றும் அப்பாவிகளை துன்புறுத்தும் பா.ஜ.க-வின் ஒழுக்கமற்ற காவல்துறையின் சப் இன்ஸ்பெக்டருக்கு துப்பாக்கியில் தோட்டாக்களைக்கூட நிரப்ப தெரியாதது வெட்கக்கேடானது. இது போன்ற போலீஸார் காவல்துறையை சிறந்ததாக மாற்றப்போகிறார்களா?" என்று சமாஜ்வாடி கட்சி கேள்வி எழுப்பியிருந்தது.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZJX9GnB
0 Comments