மத்தியப் பிரதேசத்தில், காதல் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர், தன் முன்னாள் காதலியின் முதல் எழுத்தை வைத்து ஒரு டீக்கடையைத் தொடங்கியிருக்கிறார். இவரின் செயல் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. பாபு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அந்த இளைஞர், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல், நிராகரித்துச் சென்ற தன் முன்னாள் காதலி பெயரின் முதல் எழுத்தை வைத்து `M Bewafa Chaiwala' என்ற பெயரில் கில்சிப்பூர் நகர் பேருந்து நிலையம் அருகே டீக்கடை ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இதில் என்ன பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது என்று பார்த்தால், அந்த இளைஞர் அங்குதான் வித்தியாசமாக யோசித்து முடிவெடுத்திருக்கிறார். சாதாரணமாக டீ குடிக்கவருவோர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு கப் டீயின் விலை பத்து ரூபாய். இதுவே டீ குடிக்க வருவோர்களில் யாராவது காதல் தோல்வியாளர் என்றால் அவர்களுக்கு மட்டும் ஒரு கப் டீ ஐந்து ரூபாய் மட்டுமே. இத்தனைக்கும் அந்த இளைஞர் இளங்கலை இறுதியாண்டு மாணவராம்.
இது குறித்துப் பேசிய அந்த இளைஞர், ``ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உறவினர் திருமணத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். பின்னர் அப்படியே நண்பர்களாக இருந்து காதலர்களாகிவிட்டோம். இரண்டாண்டுக்காலம் காதலர்களாக இருந்தோம். திடீரென ஒருநாள் என்னிடம் வேலையில்லை என்று கூறிவிட்டு வேறொரு நபரைத் திருமணத்துக்கு நிச்சயம் செய்துகொண்டார். அவர் என்னைப் பிரிந்துவிட்டார். அவரின் பெயரை வைத்தே ஒரு டீக்கடையைத் தொடங்கியிருக்கிறேன். மேலும், காதலில் தோல்வியுற்றவர்களுக்கு என்னுடைய கடையில் டீயின் விலை ஐந்து ரூபாய் மட்டுமே. அதேசமயம் ஜோடியாக வருபவர்களுக்கு டீயின் விலை பத்து ரூபாய்" என்று கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/axZ0cSB
0 Comments