கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்த காதலி - பாறசாலை இளைஞர் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கன்னியாகுமரி - கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஷாரோன்ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம் பெண்ணை காதலித்துள்ளார். ஷாரோன் ராஜிக்கு கிரீஷ்மா ரெக்கார்ட் நோட்டுக்கள் எழுதி கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரெக்கார்ட் எழுதி முடித்துவிட்டதாக கூறிய கிரீஷ்மா கடந்த 14-ம் தேதி ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். ஷாரோன் ராஜிக்கு தனது நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருந்திருக்கிறார். ஷாரோன்ராஜ் தனியாக கிரீஷ்மாவின் வீட்டுக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். பைக்கில் இருந்த அவரது நண்பர் ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக்கேட்டதற்கு, அவர் சரியாக பதில் சொல்லவில்லை எனகூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டுக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை மோசமானது. அதைத் தொடர்ந்து பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகள் செயல் இழந்தன. அதைத் தொடர்ந்து அவர் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

கஷாயத்தில் பூச்ச்சி மருந்து கலந்து கொலைச் செய்யப்பட்ட ஷாரோன்ராஜ் கிரீஷ்மாவுடன்

கிரீஷ்மா வீட்டில் ஜூஸ் குடித்ததாக ஷாரோன் ராஜ் மருத்துவமனையில் வைத்து கூறியதைத் தொடர்ந்து அவரின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஷாரோன் ராஜின் உடலில் விஷம் சென்றுள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவர்கள் முதற்கட்டமாக தகவல் தெரிவித்தனர். ஷாரோன் ராஜும் கிரீஷ்மாவும் வெட்டுக்காடு சர்ச்சில் வைத்து ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவதாக கிரீஷ்மா அடிக்கடி கூறிவந்ததாகவும் கூறப்படுகிறது.

கிரீஷ்மா-வுக்கு ஏற்கனவே வேறு நபருடன் நிச்சயம் ஆனதால், அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ஷாரோன் ராஜுக்கு ஜூஸ்-ல் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக ஷாரோன் ராஜின் பெற்றோர் குற்றம்சாட்டினர். அதே சமயம் தான் குடித்த மருந்து கஷாயத்தை ஷாரோன்ராஜ் கேட்டதால் குடிக்க கொடுத்ததாகவும், அது கசப்பாக இருப்பதாக ஷாரோன்ராஜ் கூறியதால் ஜூஸ் கொடுத்ததாகவும், மற்றபடி தங்கள் வீட்டில் விஷம் இல்லை என்றும் கிரீஷ்மா தெரிவித்துவந்தார்.

கஷாயத்தில் பூச்ச்சி மருந்து கலந்து கொலைச் செய்யப்பட்ட ஷாரோன்ராஜ் கிரீஸ்மாவுடன்

இந்த நிலையில் வழக்கு மாவட்ட கிரைம் பிரான்ச்-க்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோரிடம் கிரைம்பிரான்ச் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அதில் தனது மாமா பயன்படுத்தி வந்த களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன்ராஜிக்கு கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார். தனது போட்டோக்கள் ஷாரோன் ராஜிடம் இருந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், ஜாதக நம்பிக்கைப்படி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவும், ஷாரோன்ராஜிம் ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/gJ19DZA

Post a Comment

0 Comments