கர்நாடக மாநிலம், சிவமோக்கா மாவட்டம், பத்ராவதியிலுள்ள பொம்மனக்கட்டே என்ற இடத்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் பாம்பு நுழைந்திருக்கிறது. உடனே, பாம்புகளை மீட்கும் நபர் வரவழைக்கப்பட்டார். அவரும் அந்தப் பாம்பை பிடித்தார். எனினும், அந்தப் பாம்பு மிக ஆக்ரோஷமாகக் காணப்பட்டது. அதன் தலைப் பகுதியைப் பிடித்தபோது பாம்பு தலையை விரித்து, படமெடுத்தது. உடனே பாம்பைப் பிடித்தவர் அந்தப் பாம்பின் பின்பகுதியில் முத்தமிட முயன்றார். அதேநேரத்தில், பாம்பு தன் தலையைத் திருப்பி அவரின் உதட்டில் கடித்தது.
A reptile expert who went to kiss a cobra and got bitten on the lip..
— AH Siddiqui (@anwar0262) October 1, 2022
He tried to kiss the snake after rescuing it.
#Kiss #Cobra #CobraBite #Viral pic.twitter.com/Khbfc2vK3W
உடனே பதறிய அந்த நபர் பாம்பைத் தூக்கிப்போட்டார். பாம்பு தன்னை தற்காத்துக்கொள்ள வேகமாக ஓடியது. ஆனால், அருகில் இருந்த மற்றொரு நபர் அந்தப் பாம்பை பிடித்தார். இந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது. பாம்புக்கடிக்கு உள்ளான அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/2kzn0Lu
0 Comments