கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட விகே பாடி என்னும் ஊரில் NH-66 சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றுவருகிறது. அதனால் அரசு அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளையும், மரங்களையும் ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு அகற்றிவருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் ஒரு பெரிய மரத்தை ஜே.சி.பி கொண்டு வேரோடு சாய்த்திருக்கின்றனர்.
அப்போது அந்த மரத்தில் கூடுகட்டித் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் மரத்தோடு சாய்ந்து, சாலையில் விழுந்து காயமடைந்து இறந்தன. சில பறவைகள் மட்டும் அங்கிருந்து பறந்து தப்பிக்க... பெரும்பாலான பறவைகள் துடிதுடித்து சாலையில் விழுந்து இறந்தன.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, காண்போரை மனமுடையச் செய்கிறது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் ஒப்புதல் இல்லாமல் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகவும், ஜே.சி.பி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
வைரலாகி வரும் இந்த வீடியோ சூழலியல் செயற்பாட்டாளர்களை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதிகாரிகளின் இந்தச் செயலுக்கு கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/EO1A0kh
0 Comments