ஆண் - பெண் இருவருக்குமுள்ள பாலின இடைவெளியைக் குறைப்பதற்காகக் கேரள அரசு முன்னெடுத்த திட்டங்கள்தான், கேரள பள்ளிகளில் மாணவர்களுக்கான பாலின சமத்துவ சீருடை மற்றும் சமத்துவ இருக்கை. இந்த திட்டத்திற்கு எதிராகப் பல முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. முக்கியமாகக் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எதிர்த்ததால் இவ்விரு திட்டங்களையும் திரும்பப் பெறுவதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24 -ம் தேதி, மாநில சட்டமன்றத்தில் சிபிஐ (எம்) எம்.எல்.ஏ, கேகே ஷைலஜா தாக்கல் செய்த சமர்ப்பிப்புக்குப் பதில் அளித்த பினராயி விஜயன், `பள்ளிகளில் சமத்துவ சீருடையை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் குறிப்பிட்டுப் பேசியவர், `` ஒவ்வொருவருக்கும் அவரவர் சமூகக் கடமைகளின்படி உணவு, உடை மற்றும் நம்பிக்கைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உண்டு. அத்தகைய சுதந்திரமானது, எவ்வித தீவிரவாத நிலைப்பட்டாலும் பாதிக்கப்படாமலிருக்க அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியும், சீருடைகளை அவர்களே தேர்வு செய்யலாம். இது தொடர்பாக அரசு குறிப்பிட்ட உத்தரவு எதையும் வெளியிடவில்லை. பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்தவொரு முயற்சியும், முற்போக்கான அறிவு சமுதாயத்தை உருவாக்குவதற்கான இலக்கைத் தடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல பெண்களும் ஆண்களும் ஒரே பெஞ்சில் அமர ஊக்குவிக்கப்படும் எனத் தெரிவித்த சமத்துவ இருக்கைகள் குறித்த திட்டத்தின் முன்மொழிவு, செவ்வாய்க் கிழமையன்று அரசால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/ynFSQWI
0 Comments