உ.பி: `அரசு வேலை கிடைக்கவில்லை’ - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்; யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளைஞர்?!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் நக்லா தல்ஃபி பகுதியை சேர்ந்த் இளைஞர் கர்மவீர் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைக்காக முயற்சி செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தில் சேர்வதற்காகவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

இந்நிலையில், தனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த கர்மவீர் சிங் நேற்று முந்தினம் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதைப் பார்த்த அவரின் குடும்பத்தார், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வாட்ஸ் அப்

இந்த நிலையில், இது தொடர்பாக, ஆக்ரா போலீஸ் நிலையத்தின் சார்பில், ``ஞாயிற்றுக்கிழமை இரவு யமுனை ஆற்றில் குதிப்பதற்கு முன்பு கர்மவீர் சிங் என்ற இளைஞர் தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர், யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இளைஞரின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. யமுனை ஆற்றில் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். ஆற்றின் கரையில் கர்மவீரின் செருப்பு மற்றும் செல்போனை கண்டுபிடித்தனர்'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/xNL652l

Post a Comment

0 Comments