"சொந்தமாக உருவாக்கிய விமானம்!" - குடும்பத்துடன் ஐரோப்பாவைச் சுற்றி வரும் கேரள நபர்!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் அலிசெரில் தாமராக்‌ஷன் என்பவர் நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் ஒன்றை கொரோனா தொற்றுக் காலத்தில் தனது சொந்த செலவில் உருவாக்கியுள்ளார்.

ஒரு விமானம் விபத்துக்குள்ளான செய்திதான் தமராக்‌ஷனை ஒரு சொந்த விமானம் செய்யத் தூண்டியிருக்கிறது. இந்த விமானத்தைத் தயாரிப்பதற்காக சுமார் 18 மாதங்களில் 1500 மணிநேரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் அசோக். மேலும், இதற்காக மொத்தம் ₹1.8 கோடி ரூபாயை இவர் செலவழித்திருக்கிறார். தற்போது தாமராக்‌ஷன் அவரது குடும்பத்துடன் தான் வசிக்கும் இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சுற்றி வருகிறார். விமானி உரிமம் பெற்ற இவர் இதுவரை ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு போன்ற பல நாடுகளுக்குத் தனது குடும்பத்துடன் பயணம் செய்திருக்கிறார். தான் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிப்பதால் இப்படித் தனியாகச் சொந்தமாகத் தயாரித்த விமானத்தில் சுற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் இது அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கிறார் அசோக்.

சொந்தமாக உருவாக்கிய விமானம்

இவர் உருவாக்கிய இந்த விமானத்திற்கு அவரது இளைய மகள் தியாவின் நினைவாக 'ஜி-தியா' என்ற பெயரை வைத்திருக்கிறார். கேரள சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி தாமராக்‌ஷனின் மகன்தான் அசோக் அலிசெரில் தாமராக்ஷன். இவர் பாலக்காடு பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து முடித்துவிட்டு, இங்கிலாந்தில் தனது முதுகலை படிப்பையும் முடித்திருக்கிறார்.

இந்த விமானத்தைத் தயாரித்த அனுபவம் குறித்து தமராக்‌ஷன் கூறியது, "புதிய கேட்ஜெட்டைப் பெறுவதை விடப் புதிதாக ஒன்றை உருவாக்குவது என்பது மிகவும் உற்சாகமானது. சொந்தமாக விமானம் வாங்குவதற்காக முதல் லாக்டௌனில் இருந்து நாங்கள் பணத்தைச் சேமிக்கத் தொடங்கினோம். பிறகு 2018-ம் ஆண்டு பைலட் உரிமம் பெற்ற பிறகு, முதன்முதலாக இரண்டு பேர் செல்லக்கூடிய சிறிய விமானம் ஒன்றை நாங்கள் வாங்கினோம். குடும்பம் பெரிதான பிறகு நான்கு பேர் செல்லக்கூடிய விமானம் வாங்கலாம் என்று யோசித்தோம். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதனால்தான் புதிதாக நானே ஒரு விமானத்தை உருவாக்க முடிவு செய்தேன்" என்று அவர் கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/42aXeFY

Post a Comment

0 Comments