கர்நாடக மாநிலத்தில் விவசாய சங்க தலைவராக இருந்து வந்தவர் கோடிஹள்ளி சந்திரசேகர். விவசாய சங்கத்தின் நிதியை முறைகேடு செய்ததாக சமீப காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர் மாநில விவசாய சங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக பசவராஜப்பா தேர்வு செய்யப்பட்டார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இது, மற்ற விவசாய சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கர்நாடக ராஜ்ய ரைதா சங்கத்தின் (KRRS) ஒரு பிரிவின் தலைவராக இருக்கிறார்.
கோடிஹள்ளி சந்திரசேகர் இது குறித்து, ``டெல்லி முதல்வரால் மட்டுமே ஊழலை நாட்டிலிருந்து அகற்ற முடியும்'' என்றார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, தனது ட்விட்டர் பதிவில், `` சமீபத்தில் கர்நாடக மாநில விவசாய சங்க தலைவராக இருந்த கோடிஹள்ளி சந்திரசேகரை அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியில் சேர்த்தார். இவர் விவசாயிகள் தொடர்பான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது அவர் போராட்டத்தை வாபஸ் பெற ரூ.35 கோடி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டதையடுத்து, அவரை விவசாய சங்கத்தினர் இந்த வாரம் வெளியேற்றியிருக்கின்றனர். கெஜ்ரிவாலை நேர்மையானவர் என கூறுவது நகைச்சுவையானது'' என தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/W9DTkzh
0 Comments