உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட பங்கர்மாவ் பகுதியில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில், கடந்த சனிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 18 வயது செவிலியரின் மரணத்தில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸ் விசாரித்து வந்தனர். இந்தநிலையில், தூக்குப் போட்டுக்கொண்டதால் தான் அப்பெண் உயிரிழந்தார் என மருத்துவ பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மருத்துவமனையொன்றில், செவிலியராக பணிபுரிந்துவந்த இந்தப் பெண், அங்கு ஒரு இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறிய பிறகு, திடீரென அந்த இளைஞன் அப்பெண்ணை விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அப்பெண் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தான் புதிதாக பணிக்குச் சேர்ந்த புதிய நர்சிங் ஹோமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணை குறித்துப் பேசிய அதிகாரியொருவர், ``சம்பந்தப்பட்ட இளைஞன் சந்தீப் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக பெண்ணுடைய தாயாரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில், சந்தீப் தற்கொலைக்குத் தூண்டியிருப்பதாகவும் புகார் வந்திருப்பதாக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், செவிலியரின் மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஏதுவும் உறுதிசெய்யப்படவில்லை, தூக்குப்போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்பட்டிருப்பதாக உன்னாவ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சசிசேகர் சிங் கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில், செவிலியரின் தாயார் முன்னதாக, நர்சிங் ஹோம் நிர்வாகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட மொத்தம் 4 நபர்கள், தன் மகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக குற்றம் சாட்டியிருந்தார். அதனடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, நர்சிங்க் ஹோமுக்கு சீல் வைத்து, செவிலியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/8u9a3ey
0 Comments