கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கவிருக்கிறது. இந்தப் பருவநிலைக் காலத்தில் ஏற்படும் டெங்கு, எலிக்காய்ச்சல், நிபா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க, அந்த மாநில சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், குரங்கு அம்மை நோய் பரவாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில் கடந்த சில தினங்களாக `வெஸ்ட் நைல் வைரஸ்' என்ற புதிய வகை காய்ச்சல் பரவிவருகிறது.
இந்த வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் கொசுவின் மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ``இந்த வகை காய்ச்சல் கொசுவின் மூலம் பரவுவதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோரிக்கை விடுத்திருக்கிறார். கேரளாவில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தற்போது புதிதாகப் பரவிவரும் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/6d4SFsP
0 Comments