பெங்களூரு மங்கனஹள்ளியில் மார்ச் மாதம் 23-ம் தேதி ஸ்கூட்டரில் சென்ற தந்தையும் மகளும் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் வெடித்ததில் எரிந்து தீக்காயங்களோடு இறந்து போன வழக்கில், பெங்களூரு மின்சார விநியோக நிறுவனமான பெஸ்காமை சேர்ந்த உதவி பொறியாளர் தினேஷ் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர் மகந்தேஷ் ஆகிய இரு அதிகாரிகள் கர்நாடக காவல்துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு அன்று மாலையே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தன் மகள் சைதன்யாவின் நிச்சயதார்த்த விழாவுக்காக மண்டபத்தை முன்பதிவு செய்துவிட்டு தந்தை சிவராஜ் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டரில் வந்துள்ளனர். அங்கே மின்சார டிரான்ஸ்ஃபார்மர் வெடித்துச் சிதறியதில் சாலையைக் கடக்க தனது வண்டியை மெதுவாக ஓட்டியுள்ளார் சிவராஜ். இந்நிலையில் டிரான்ஸஃபார்மாரில் இருந்து சிதறிய எண்ணெய் இவர்களின் மேல் தெளித்து எரிந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரத்தில் தந்தை இறந்துள்ளார், மறுநாள் மகளும் இறந்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் ஹெல்ப்லைன் மூலம், இரண்டு நாள்களுக்கு முன் புகார் அளித்தும் ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். விபத்து நடந்த நாளில் டிரான்ஸ்ஃபார்மர் தீப்பற்றி எரிந்துள்ளது. அது குறித்தும் மக்கள் புகாரளித்தனர். பெஸ்காம் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இரண்டு உயிர்கள் பறிபோனதற்கு காரணம் என குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரணையின் முடிவில் புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால், அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் பெஸ்காம் ஹெல்ப்லைன் ஊழியர்களும் அலட்சியம் காட்டியது தெரியவந்துள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/GWHpFq0
0 Comments