கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. இதன் காரணாமாகக் கடந்த திங்களன்று அந்தப் பகுதியில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், ஷிவமோகா மாவட்ட காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கர்நாடக எஸ்.பி பி.எம் லக்ஷ்மி பிரசாத், இந்த விசாரணையில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று கைது செய்யப்பட்ட 2 பேர் மட்டும் எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாதவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஹர்ஷா கொலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் குறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``பஜ்ரங் தள் செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் `கொலைகாரர்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள்'. அவர்களுக்கு எந்த மதமும் கிடையாது. மேலும், அவர்கள் அமைதியை சீர்கெடுத்துள்ளனர்" என கூறியுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/mzCMTZt
0 Comments