பதிப்புரிமை விதிமீறல் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உட்படக் கூகுள் ஊழியர்கள் ஆறு பேர்மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஜனவரி 25-ம் தேதி மும்பையில் FIR பதியப்பட்டுள்ளது. 'எக் ஹசீனா தி எக் திவான தா' என்ற இந்தி மொழித் திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பாளர், இயக்குநரின் அனுமதி இல்லாமல் யூடியூப்பில் பதிவேற்றம் செய்தது தொடர்பாகக் கூகுள் ஊழியர்கள்மீது வழக்குப் பதியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் இருந்து பதிப்புரிமை இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்தத் திரைப்படத்தை நீக்குவதற்காகக் கூகுள் மற்றும் யூடியூப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், ஆனாலும் அந்தத் தளத்தில் திரைப்படத்தை நீக்குவதற்கான எந்த முயற்சிகளையும் அந்த நிறுவனங்கள் எடுக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: `பச்சக்கிளிக்கு புல்லட் வாங்கித் தரவும்' Elon Musk-கிடம் 50 ஆயிரம் டாலர் கேட்ட மாணவர்!
யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இந்தத் திரைப்படத்தை தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர். இதனால் தங்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுனீல் தர்ஷன். இதுகுறித்து பேசிய டிசிபி சஞ்சய் லத்கர், "நீதிமன்ற உத்தரவின் கீழ் சட்டப்பிரிவு 156 (3)-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது" என்றார். இந்த வழக்கிற்காகக் கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, யூடியூபின் முக்கிய நிர்வாகி கவுதம் ஆனந்த், குறைதீர்ப்பு அதிகாரியான ஜோ கிரியர் மற்றும் கூகுளில் பணிபுரியும் நம்ரதா ராஜ்குமார், பவன் அகர்வால், சைதன்யா பிரபு ஆகியோருக்கு சம்மன் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது மும்பை போலீஸ்.
Also Read: இனி கீபேட் கொண்ட ஃபீச்சர் போன்களிலும் UPI பணப் பரிவர்த்தனை வசதி... சோதனை செய்து வரும் NPCI!
இது குறித்து இந்தியாவில் இருக்கும் கூகுளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசும் போது, "பதிப்புரிமை மீறல் தொடர்பான தகவல்களுக்கு அதன் உரிமையாளர்களையே சார்ந்திருக்கிறது கூகுள். மேலும், தங்களுடைய காணொளிகளைப் பதிப்புரிமை இல்லாமல் யூடியூப் தளத்தில் பதிவேற்றி இருந்தால், அதனைத் தடுப்பது, நீக்குவது மற்றும் அதன் மூலம் வருமானம் பெரும் வழிமுறைகளை உரிமையாளர்கள் யாருடைய தலையீடும் இல்லாமல் தாங்களாகவே செய்து கொள்ளும் கருவிகளையும் கூகுள் வழங்கியிருக்கிறது." என்றார். மேலும், கூறிய அவர், "பதிப்புரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்கள் எங்களுக்கு வந்தால் உடனடியாக அதனை நீக்கிவிட்டு, அதனைப் பதிவேற்றிய கணக்கையும் தடை செய்து விடுமோம்" என்றார்.
பதிப்புரிமை விதிமீறல் மட்டுமில்லாமல், தங்களுடைய திரைப்படத்தின் மூலம் விளம்பர வருமானமாகப் பல லட்சம் ரூபாயை யூடியூப் ஈட்டியிருக்கிறது என்றும் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/3r7f5Uc
0 Comments