உத்தரபிரதேசம் ஓரையா மாவட்டத்தில் உள்ள பிதுனா காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. "நடந்து கொண்டிருக்கிற கல்யாணத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது. இரு வீட்டாரும் சண்டையிட்டு கொள்கின்றனர். வேகமா வாங்க!" என்று வந்த அழைப்புக்கு நவீன் பாஸ்தி உள்ளிட்ட காவலர்கள் விசாரிக்க செல்கின்றனர். வர்மலா என ஒரு சம்பிரதாயம் வடமாநில கல்யாணங்களில் நடைபெறும். அது என்னனு யோசிக்காதீங்க. நம்ம ஊர்ல மாலை மாற்றுவதுன்னு சொல்வோமே அது தான். மாலை மாற்றும்போது தான் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. மணப்பெண் சார்பில், "மாப்பிள்ளை மாலை மாற்றும்போது மாலையைக் கழுத்தில் அணிவிக்காமல் தூக்கி வீசியவாறு போட்டதால் மணப்பெண் கல்யாணத்தை நிறுத்திவிட்டார்" என்கிறார்கள்.
மணமகன் வீட்டார் "மாப்பிள்ளை தூக்கிலாம் எரியவில்லை. பெண்ணுக்கு வேறு பிரச்சனை" என்கிறார்கள். இருவரும் சமாதானம் ஆகாத சூழலில் திருமணம் நிறுத்தப்படுகிறது. கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளை அவரவர் எடுத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு இருவீட்டாரும் புறப்பட்டு விட்டனர். இந்த செய்தியை சமூக வலைதளங்களில் கண்ட நெட்டிசன்கள் மாலை மாத்தும் போது கவனமாக இருங்கணும் பாஸ் .
from தேசிய செய்திகள் https://bit.ly/3r9Sgza
0 Comments