நிலக்கோட்டை விபத்தில் இருந்து பாடம் கற்பார்களா?- அதிவேகமாக பயணிக்கும் ‘பைக் ரைடர்’களால் ஏற்படும் உயிரிழப்புகள்: கவனத்தில் கொள்ள வேண்டிய பெற்றோர்கள், இளைஞர்கள்

அதிவேகத் திறன் மிக்க பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் நிலக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர். இதில் ஒரு இளைஞர் தூக்கி வீசப்பட்டதில் மின் கம்பியில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவத்துக்குப் பிறகாவது, அதிவேக பைக் ரைடர்கள் தங்கள் பொறுப்பைஉணர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். மது போதையில் வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது என்று தொடங்கி போக்குவரத்து விதிமீறல்களைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments