
மெரினாவில் போராட்டம் நடத்தமுயன்றால், கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்தக் கோரி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், கல்லூரி தேர்வுகள் ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதை மாணவப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments