
தொண்டர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுசசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
என்னை சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் ஆட்சேபம் இல்லை.ஆனால் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தொண்டர்களை அவர்கள் வாழும் இடத்துக்கே வந்து விரைவில் சந்திக்க இருக்கிறேன். இவ்வாறு சசிகலாதெரிவித்துள்ளார். இதற்கிடையில், சசிகலா துணையுடன் சட்டப்படி அதிமுகவை மீட்போம் என்றுஅமமுக பொதுச் செயலாளர் தினகரன் நேற்று கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments