பருவமழை தொடங்கியதால் நடப்பு ஆண்டு சீஸன் நிறைவு- தூத்துக்குடி மாவட்டத்தில் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு சீஸன் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு ஆண்டில் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments